2009-05-12 18:35:34

திருத்தந்தையின் எருசலேம் திருப்பயணச் சிறப்பு நிகழ்ச்சி . குடியரசுத்தலைவர் மாளிகை . 120509 .


ஜோர்டான் நாட்டிலிருந்து கிளம்பி திங்கள் நண்பகலில் திருத்தந்தை எருசலேம் சென்றடைந்தார் . அங்கு அவர் எருசலேத்தின் கிழக்கே ஒலிவ மலையில் உள்ள அப்போஸ்தலிக்கக் குழுவினரின் இல்லத்தில் தங்கியுள்ளார் . அதற்கு அருகில்தான் இயேசு இரவு முழுவதும் செபித்த இடமும் , யூதாஸ் காட்டிக்கொடுத்த இடமுமான ஜெத்சமனித் தோட்டம் இருக்கிறது .

அங்கிருந்து திங்களன்று உள்ளூர் நேரம் மாலை 4 , இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு 15 கிலோ தொலைவில் உள்ள இஸ்ராயேலின் குடியரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்றார் .மாளிகை நுழைவாயிலிலிருந்து திருத்தந்தையை குடியரசுத்தலைவர் ஷிமோன் பேரஸ் அழைத்துச் சென்றார் . இசை மழை பொழிந்தது . புகைப்படம் எடுத்துக் கொண்டனர் . குடும்பத்தினரும் உடன் இருந்தனர் . பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொண்டனர் . மாளிகையினுள் இருக்கும் தோட்டத்தில் திருத்தந்தை செடி ஒன்றை தம் வருகையின் நினைவாக நட்டுவைத்தார் .. பின்னர் குடியரசுத்தலைவர் ஷிமோன் பேரஸ் திருத்தந்தையை வாழ்த்தி வரவேற்றார் .








All the contents on this site are copyrighted ©.