2009-05-12 15:15:08

எருசலேம் மேல்மாடியில் அல்லேலூயா வாழ்த்தொலி செபம், திருத்தந்தையின் உரை


மே12,2009. நம் ஆண்டவர் தாம் தேர்ந்து கொண்ட சீடர்களுக்குத் தமது இதயத்தைத் திறந்ததது, பாஸ்கா பேருண்மையைக் கொண்டாடியது, பெந்தகோஸ்தே நாளில் தூய ஆவியைப் பெற்று நற்செய்தியைப் பரப்பத் தூண்டல் பெற்றது என முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றதாக பாரம்பரியமாகச் சொல்லப்படும் இந்த மேல் அறையிலிருந்து உங்களை வாழ்த்துகிறேன். கிறிஸ்தவர்கள் என்ற வகையில் நமது வாழ்வானது வெறும் மனித முயற்சியால் நடப்பதல்ல. திருநற்கருணையில் இறையன்புப் பேருண்மையில் நாம் ஈர்க்கப்படுகிறோம். அன்பு சகோதர ஆயர்களே, தம் வாழ்வை நமக்காகப் பலியாக்கிய நல்ல ஆயன் நமக்கு எடுத்துக்காட்டு. திருச்சபையில் அன்பின் கொடை எந்த அளவுக்கு ஏற்கப்பட்டு வளருகிறதோ அந்த அளவுக்கு புனித பூமியிலும் அதன் அண்டைப் பகுதியிலும் கிறிஸ்தவப் பிரசன்னம் துடிப்புடையதாக இருக்கும். இந்தப் பூமியில் அமைதிக்கான உங்கள் முயற்சிகளுக்கு எனது ஆதரவும் ஊக்கமும் எப்போதும் உண்டு. புனிதபூமி மற்றும் மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள கிறிஸ்தவ சமூகங்களுக்கு உலகிலுள்ள அனைத்துக் கிறிஸ்தவர்களும் செபிக்கவும் ஆதரவு அளிக்கவும் வேண்டுமென்ற எனது அழைப்பை மீண்டும் விடுக்கிறேன். எதிர்காலத்தில் இன்னும் அதிகத் திருப்பயணிகள் இங்கு வரவேண்டும் என்று சொல்லி இவ்வுரையை தமது ஆசீரோடு முடித்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.