2009-05-11 14:49:32

மே 12 நற்செய்தி யோவா.14, 27-31


அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது - அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். ' நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன் ' என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர். இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன். இனி நான் உங்களோடு மிகுதியாக பேசப் போவதில்லை; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் வந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு என் மேல் அதிகாரம் இல்லை. ஆனால் நான் தந்தையின் மீது அன்பு கொண்டுள்ளேன் என்பதையும் அவர் எனக்குக் கட்டளையிட்டபடி செயல்படுகிறேன் என்பதையும் உலகு தெரிந்து கொள்ள வேண்டும்.








All the contents on this site are copyrighted ©.