2009-05-11 18:16:41

கத்தோலிக்க ஆலயங்களுக்குத் திருத்தந்தை அடிக்கல் நாட்டல். 110509 .


ஜோர்டானின் யோர்தான் நதிக்கரையில் திருத்தந்தை இரண்டு கத்தோலிக்கத் திருச்சபையின் ஆலயங்களுக்கு அடிக்கல் நாட்டினார் . அதுபோது அவர் நிகழ்த்திய உரையில் , யோர்தான் நதி பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்தது எனத் திருத்தந்தை கூறினார் . திஸ்பைட் நகரைச் சேர்ந்த இறைவாக்கினர் எலியாஸ் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர் என்றும் , அதற்கு அருகில்தான் ஜெரிக்கோ நகரை நோக்கிய வண்ணம் இறைவாக்கினர் எலியாஸ் வானகம் சென்றதாகவும் திருத்தந்தை தெரிவித்தார் .



அந்த மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் ஜோர்டான் நாட்டின் மன்னராலும் மகாராணியாராலும் வரவேற்கப்படுவதற்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .





அங்கு நடப்பட்ட அஸ்திவாரக்கல் கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை . திருச்சபை கிறிஸ்தவில் நிலையாக உள்ளது . கிறிஸ்துவால் காக்கப்படுகிறது . அவரிடமிருந்து பிரிக்கப்படமுடியாது . கிறிஸ்துவே எல்லாக் கிறிஸ்தவக் குடும்பங்களுக்கும் , குழுக்களுக்கும் ஒரே அடித்தளமாக இருக்கிறார் , வாழும் அடித்தளமாக , ஒதுக்கப்பட்ட அடிக்கல்லாக ஆனால் கடவுள் பார்வையில் மிகவும் பிரியமான மூலைக்கல்லாக இருக்கிறார் கிறிஸ்து என மேலும் கூறினார் திருத்தந்தை .





தமது உரையின் முடிவில் இரண்டு புனிதமான கோயில்களின் அடிக்கற்களையும் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அர்ச்சித்தார் . ஆண்டவர் இவற்றைப் பாதுகாத்து , உறுதிப்படுத்தி , கடவுளை இங்குவந்து வணங்கும் மக்களைப் பெருகச்செய்வாராக . உங்கள் அனைவரையும் தம் சமாதானத்தால் நிரப்புவாராக , ஆமென் எனச் செபித்து திருத்தந்தை அந்த ஆலய அடிக்கற்களைப் புனிதப்படுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.