2009-05-11 18:24:16

இஸ்ராயேலில் திருத்தந்தை . 110509 .


இஸ்ராயேலின் பிரதமர் ஷிமோன் பேரஸ் திருத்தந்தையை வாழ்த்தி வரவேற்றார் . அவரது வரவேற்புரைக்கு நன்றி கூறிய திருத்தந்தை இஸ்ராயேல் நாடு பல கோடி மக்களுக்குப் புனித , புண்ணிய பூமியாகத் திகழ்கிறது என்றார் . தாம் அத்திருநாட்டுக்கு ஒரு திருப்பயணியாகச் சென்றுள்ளதாகத் தெரிவித்தார் . அங்கு திருப்பூமியில் அமைதிக்காகவும் , உலகமனைத்துக்கும் அமைதிக்காகவும் செபிப்பதாகத் தெரிவித்தார் .

எருசலேத்தில் தங்கியிருக்கும்போது பல சமயத்தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும் என்றும் தெரிவித்தார் .



எருசலேம் என்றால் அமைதி எனப் பொருள்படும் . ஆனால் முரண்பாடாக அங்கு அமைதி இல்லாத நிலை பல காலமாக நிலவி வருவதாகத் தெரிவித்தார் . பெருந்துயரத்திற்கு உள்ளாகியுள்ள அந்நாட்டிலும் பக்கத்து நாடுகளிலும் அமைதி உருவாக உலகு அனைத்துமே எதிர்நோக்கியிருப்பதாக மேலும் தெரிவித்தார் .

அந்நாட்டில் உள்ள கத்தோலிக்க ஆயர்களுக்கும் குருக்களுக்கும் இறைமக்களுக்கும் தம்முடைய சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார் . முடிவில் மீண்டும் பிரதமர் ஷிமோன் பேரசுக்கும் , மக்களுக்கும் அவர்களுடைய வரவேற்புக்கு நன்றி கூறி இறைவன் அனைவருக்கும் நல்லாசி தருமாறு வாழ்த்துக்கூறினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .

 








All the contents on this site are copyrighted ©.