2009-05-07 12:10:23

வரலாற்றில் மே 08


உலக செஞ்சிலுவை நாள். புனித கனோசா மதலேனா விழா. இத்தாலியில் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த இவர், பிறரன்புப் பிள்ளைகள் என்ற கனோசியன் துறவு சபைகளை நிறுவியவர். நீ எல்லாவற்றையும் இழக்க வேண்டியிருந்தாலும் கடவுளில் மட்டுமே உனது நம்பிக்கையை வை. அப்போது நீ எல்லாவற்றையும் கடவுளில் கண்டடைவாய் என்று இப்புனிதை சொல்வார்.

1828 - செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவிய ஹென்றி டியூனாண்ட் பிறந்தார்.

1902 – கரிபியன் பகுதியிலுள்ள மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.

1933 - மோகன்தாஸ் காந்தி இந்தியாவில் பிரித்தானிய அடக்குமுறையை எதிர்த்து 21-நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர்.

1951 - ஈழத்துப் புலவர் மு. நல்லதம்பி இறந்தார்.








All the contents on this site are copyrighted ©.