2009-05-01 18:13:35

கத்தோலிக்கர்களின் ஓட்டு யாருக்கு , மும்பைக் கர்தினால் . 010509 .


கத்தோலிக்கர்கள் வளமான இந்தியாவுக்காக தேர்தலில் வாக்களிப்பர் என மும்பையின் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் தெரிவிக்கிறார் . வரவுள்ள புதிய அரசுக்கு இரண்டு தலையாய பணிகள் காத்திருப்பதாகக் கூறிய கர்தினால் திருச்சபையையும் , அரசியலையும் பிரித்து வைக்கவேண்டும் . மதத்தையும் அரசியலையும் கலக்கக் கூடாது. மற்றும் ஏழ்மையைப் போக்க உறுதிகொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார் .மேற்கு வங்காளத்திலும் மகாராட்டிரத்திலும் மொத்தம் ஒரு கோடியே 40 இலட்சம் மக்கள் பாராளுமன்றத்துக்கு வாக்களித்தனர் . கல்கத்தா நகரம் அன்னை தெரசா வாழ்ந்த பகுதி . அங்கு வறுமைக்கும் ஏழ்மைக்கும் பஞ்சமே இல்லை . இந்தியாவிலிருக்கும் ஒரு கோடியே 70 லட்சம் கத்தோலிக்கர்களையும் கண்டிப்பாக தேர்தலில் வாக்களிக்கும்படியும் , புத்திசாலித்தனமாக வாக்களிக்குமாறும் கர்தினால் கிராசியாஸ் கேட்டுக்கொண்டார் . வாக்களிப்பது சரியானதுமட்டுமல்ல , அது ஒருவருடைய கடமை என்றும் கர்தினால் தெரிவித்தார் . நல்ல ஆட்சியாளர்களைத் தேர்வு செய்யுமாறும் , நல்ல தலைவர்களைத் தருமாறும் கடவுளிடம் மன்றாடுமாறு மும்பையின் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் கேட்டுக்கொண்டுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.