2009-04-30 17:40:20

கனடா நாட்டின் பழங்குடிமக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு திருத்தந்தை மன்னிப்பு விழைந்தார். 30-04-09


ஏப்ரல் 29ல் வழக்கமான புதன் மறைபோதக முடிவில் திருத்தந்தை கனடா நாட்டின் பழங்குடி மக்களின் தலைவர்களைச் சந்தி்த்துப் பேசினார் . 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் தங்கும் வசதி கொண்ட பள்ளிகளில் பயின்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்களின் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட தவறுகளுக்காகத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் கனடா நாட்டு பழங்குடி இனத்தலைவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் . குழந்தைகளை இனவேறுபாடு காரணமாகப் பிரித்துவைத்து , அவர்களது பாரம்பரிய கலாச்சாரத்தின்படி வாழவும் தடுக்கப்பட்டனர் . கத்தோலிக்க நிறுவனங்கள் நடத்திய அந்தக் கல்விக்கூடங்களில் பாலினத் தவறுகளும் , உடல் ரீதியாகத் துன்புறுத்துதல் நடந்ததற்கும் திருத்தந்தை மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் . திருச்சபையின் உறுப்பினர்கள் மனத்துயரம் தரக்கூடிய தவறான போக்கில் நடந்து கொண்டதற்குத் திருத்தந்தை வருத்தம் தெரிவித்தார் .








All the contents on this site are copyrighted ©.