2009-04-29 14:53:46

இரஷ்யாவில் மக்களின் ஆயுட்காலமும் பிறப்பு விகிதமும் குறைந்து வருவது, சமூகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன, ஐ.நா.


ஏப்.29,2009. இரஷ்யாவில் மக்களின் ஆயுட்காலமும் பிறப்பு விகிதமும் குறைந்து வருவது, அந்நாட்டின் பொருளாதார மற்றும் சமூகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று யு.என்.டி.பி. என்ற ஐ.நாவின் வளர்ச்சித் திட்ட அமைப்பு கூறியது.

வரும் பத்தாண்டுகளில் மக்கள் தொகையும், வேலை செய்யும் வயதைக் கொண்ட மக்களின் எண்ணிக்கையும், தாய்மாரின் எண்ணிக்கையும் குறையும், குடியேற்றதாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று யு.என்.டி.பியின் ஆய்வு தெரிவிக்கிறது.

இரஷ்யாவில் இடம் பெறும் இறப்பு விகிதம் வருங்கால மக்கள் தொகைக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது மற்றும் அந்நாட்டிற்கும் வளர்ந்த நாடுகளுக்கும் இடையேயான இடைவெளியை 1964ம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருகிறது என்று அவ்வாய்வு கூறுகிறது.

கடந்த 16 ஆண்டுகளில் சுமார் அறுபது இலட்சம் பேர் இரஷ்யாவில் குடியேறியுள்ளனர்.

அந்நாட்டினர் குடியேற்றதாரரை வரவேற்பதன் மூலம் நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று ஐ.நாவின் ஆய்வு பரிந்துரை செய்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.