2009-04-27 15:31:06

வரலாற்றில் ஏப்ரல் 28


பிரான்சில் பிறந்த பீட்டர் ஷாநெல், மறைப்பணி ஆர்வம் கொண்டு மரியா துறவு சபையில் சேர்ந்து குருவாகி ஓசியானியா சென்றார். ஆனால் அவர் அங்கு பொறாமை கொண்ட சமய விரோதிகளால் 1841ம் ஆண்டு, ஏப்ரல் 28ம் தேதி துண்டு துண்டாய் வெட்டிக் கொல்லப்பட்டார். இவர் ஓசியானியா மற்றும் மரியா துறவு சபையின் முதல் மறைசாட்சியாவார். இதே நாளில் புனிதர்கள் லூயி மரி கிரிஞ்னியோன், சிலுவை பவுல் ஆகியோரின் விழாக்களும் சிறப்பிக்கப்படுகின்றன.

இன்னும், ஏப்ரல் 28, 1611ல் புனித தாமஸ் பாப்பிறை மற்றும் ராயல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த பிலிப்பைன்ஸ் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் ஆசியாவின் மிகப்பழமையான மற்றும் உலகின் பெரிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகமாகும்.

1932 - மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

2001 - கோடீஸ்வரர் டென்னிஸ் டீட்டோ என்பவர் விண்வெளிக்குச் சென்ற முதல் சுற்றுலாப் பயணியானார்

2005 – காப்புரிமை சட்ட ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

ஏப்ரல் 28 சர்வதேச தொழிலாளர் நினைவு தினம்.








All the contents on this site are copyrighted ©.