2009-04-27 12:05:13

தூய பீற்றர் கனிசியுஸ் , சேசுசபை. குரு, மறைவல்லுநர் - திருவிழா. 270409 .


தூய பீற்றர் கனிசியுஸ் , சேசுசபை. குரு, மறைவல்லுநர் - திருவிழா. 270409 .

ஹாலந்து நாட்டில் 1521 ஆம் ஆண்டு நைமேகன் நகரில் தோன்றினார் . கொலோன் நகரில் பயின்ற பின் இயேசு சபையில் சேர்ந்தார் . 1546 ஆம் ஆண்டு குருத்துவ நிலைக்கு உயர்த்தப்பெற்றார் .பின்னர் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டார். அங்கு பல ஆண்டுகளாக மக்களின் விசுவாசத்தைக் காக்கவும் , உறுதிப்படுத்தவும் உதவியாயிருந்தார் . இப்பணியின் பொருட்டு பல நூல்களை எழுதினார் . இவர் எழுதிய மறைக்கல்வி என்ற நூல் புகழ் மிக்கது . தமது இறுதி நாட்களை சுவிட்சர்லாந்து நாட்டில் செலவழித்தார் . அங்கே புகழ் வாய்ந்த ப்ரைபுர்க் பல்கலைக் கழகத்திற்கு அடித்தளமிட்டார் . 1597 ஆம் ஆண்டு ப்ரைபர்க் நகரில் இவர் இறைவனடி சேர்ந்தார் . புனித போனிப்பாஸ் ஜெர்மனியின் முதல் அப்போஸ்தலர் என்றால் இவர் இரண்டாம் அப்போஸ்தலர் ஆவார் . இயேசு சபையினர் பலரை நல்ல ஞான நூல்கள் எழுதத் தூண்டினார் . நூல் எழுதும் ஒருவர் 10 பேராசிரியர்களுக்கு நிகராவார் என்பார் கனிசியுஸ் .



போலந்து நாட்டின் தூய ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா அவருக்குப் 17 வயது நடக்கும்போது இயேசு சபையில் சேர ஜெர்மனியின் டில்லிங்கன் சென்று மாநிலத் தலைவராக இருந்த பீற்றர் கனிசியுஸிடம் விண்ணப்பித்தபோது , ஸ்தனிஸ்லாசுடைய குடும்பம் சபையில் சேரத் தடை செய்யலாம் என்பதற்காக ஸ்தனிஸ்லாஸை உரோமைக்குச் செல்வதே மேல் எனக்கூறிவிட்டார் கனிசியுஸ் . ஸ்தனிஸ்லாஸ் 800 கல் தொலைவு உரோமைக்குக் கால்நடையாகச் சென்றார். இயேசுசபைத்தலைவர் தூய பிரான்சிஸ் போர்ஜியா அவரை சபையில் ஏற்றுக்கொண்டார் . இவ்வாறு மூன்று புனிதர்கள் சந்தித்திருக்கின்றனர் .










All the contents on this site are copyrighted ©.