2009-04-25 15:48:45

கடந்த மூன்று மாதங்களில் வன்னி மோதல்களில் ஏறத்தாழ ஆறாயிரத்து ஐந்நூறு அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்


ஏப்.25,2009. இலங்கை அரசுத்தலைவரை சந்தித்த இந்திய தூதுவர்களான இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும், இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனும் உடனடி போர் நிறுத்தம் இடம் பெறுமாறு கோரியிருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.

கடந்த மூன்று மாதங்களில் வன்னிப் பகுதியில் இடம் பெறும் மோதல்களில் ஏறத்தாழ ஆறாயிரத்து ஐந்நூறு அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பதினான்காயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை தூதரகங்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட தனிப்பட்ட ஐ.நா. ஆவணம் ஒன்று தெரிவிப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.

மோதல் பகுதியிலிருந்து வெளியேறியுள்ள பல்லாயிரக் கணக்கானவர்களில் பெருந்தொகையானோர் மோசமான படுகாயங்களுடனும் நோயுடனும் மருத்துவமனைகளுக்கு வருவதாக மருத்துவர்கள் இவ்வியாழக்கிழமை தெரிவித்தனர்.

மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரும்போது சிலர் வாகனங்களில் இறந்துவிடுகின்றனர். அத்துடன், தமது அன்புக்குரியவர்கள் தமது கண்முன்னால் கொல்லப்படுவதைக் கண்ட பலர் நினைவாற்றல் அற்றவர்களாக பித்துப்பிடித்தவர்களாக உள்ளனர்; தாகத்தால் ஏற்பட்ட வறட்சியால் இறக்கின்றனர் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 








All the contents on this site are copyrighted ©.