2009-04-25 15:43:07

இத்தாலியில் கத்தோலிக்க மறைக்கல்வியானது ஒருங்கிணைந்த மனித ஆளுமையை உருவாக்க உதவுகிறது, திருத்தந்தை


ஏப்.25,2009. இத்தாலியில் கத்தோலிக்க மறைக்கல்வியானது கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் வேளை, இது ஒருங்கிணைந்த மனித ஆளுமையை உருவாக்கவும் கடவுள் பற்றிய ஞானத்தின் அறிவில் வளரவும் உதவுகிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இத்தாலிய ஆயர் பேரவை, கத்தோலிக்க மறைக்கல்வி ஆசிரியர்களுக்கு உரோமையில் நடத்திய மூன்று நாள் கூட்டத்தின் நிறைவாக, சுமார் ஏழாயிரம் இத்தாலிய மறைக்கல்வி ஆசிரியர்களை இன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கத்தோலிக்க மறைக்கல்வி, இத்தாலிய பள்ளிகள் வரலாற்றில் ஒருங்கிணைந்த அங்கமாக உள்ளது என்றார்.

கத்தோலிக்க மறைக்கல்வி போதனை, வாழ்வின் இருப்பைக் கண்டு கொள்ளவும், உலகு பற்றிய உள்ளுணர்வைப் பெறவும் உதவுகிறது என்ற அவர், ஒருவரையொருவர் மதித்தல் மற்றும் உண்மையான உரையாடல் மீது அமைந்த ஓர் உறுதியான ஒன்றிணைந்த வாழ்வை வாழவும் இக்கல்வி குடிமக்களுக்கு பயனளிக்கிறது என்றார்.

இத்தாலிய பள்ளிகளில் சுமார் இருபத்தைந்தாயிரம் கத்தோலிக்க மறைக்கல்வி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.