2009-04-23 11:54:16

வரலாற்றில் ஏப்ரல் 24


புனித பிதேலிஸ் விழா. தென்மேற்கு ஜெர்மனியில் பிறந்த இவர், கப்புச்சின் துறவியாகி கடவுளின் பராமரிப்பில் மட்டும் நம்பிக்கை கொண்டு கடும் ஏழ்மை வாழ்வு வாழ்ந்தவர். பிரிந்த கிறிஸ்தவ சபையினரின் கோபத்துக்கு ஆளாகி 1622ம் ஆண்டு, ஏப்ரல் 24ம் தேதி கொல்லப்பட்டார். இவர் கப்புச்சின் துறவு சபையின் முதல் மறைசாட்சியாவார்.

1342 - திருத்தந்தை 12ம் பெனடிக்ட் இறந்தார்.

1581 – ப்ரெஞ்ச் புனிதரான வின்சென்ட் தெ பவுலும்,

1820 - தமிழுக்கு சேவை செய்த அமெரிக்கரான ஜி. யு. போப்புவும் பிறந்தனர்.

1957 – சூயஸ் கால்வாய் மீண்டும் திறக்கப்பட்டது.

1961– 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த "வாசா" என்ற சுவீடனின் கப்பல் மீட்டெடுக்கப்பட்டது.

1967 - சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த ரஷ்ய வீரர் விளாடிமிர் கொமரோவ் என்பவர், தனது குதிகுடை திறக்கமுடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரராவார்

1968 - மொரீசியஸ் ஐநாவின் உறுப்பு நாடாகியது.

1993 - இந்தியாவில் பஞ்சாயத்து அரசுத் திட்டம் அமைக்கப்பட்டது.

2005– கர்தினலா ஜோசப் ராட்சிங்கராகிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கத்தோலிக்கத் திருச்சபையின் 264வது பாப்பிறையாகப் பொறுப்பேற்றார்

2006 - நேபாளத்தில் மன்னருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து 2002 இல் கலைக்கபட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் அமைக்க மன்னர் உத்தரவிட்டார்.

 








All the contents on this site are copyrighted ©.