2009-04-20 14:48:18

வரலாற்றில் ஏப்ரல் 21


புனித அன்செல்ம் விழா. ஸ்பெயின் நாட்டுப் பேராயரான இவர், ஓ, எங்கள் இறைவனாகிய ஆண்டவரே, நாங்கள் எங்கள் முழு உள்ளத்தோடு உம்மைத் தேடிக் கண்டுபிடிக்கவும், கண்டுபிடித்து உம்மை அன்பு செய்யவும் பாவத்தை வெறுத்து நடக்கவும் வரம் தாரும் என்று செபித்தவர்.

கி.மு 753 – ரோமுலஸ், ரேமுஸ் ஆகிய இருவரும் ரோம் நகரை உருவாக்கினர்.

1073 – திருத்தந்தை இரண்டாம் அலெக்ஸாண்டர் இறந்தார்.

1651 - இலங்கையின் அப்போஸ்தலர் முத்தி பெற்ற ஜோசப் வாஸ் பிறந்தார்.

1938 – இந்திய மெய்யியலாரும் கவிஞருமான அல்லாமா இக்பால் இறந்தார்.

1944 - பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1960 – பிரசீலியா, பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்டது

1964 - புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் இறந்தார்.

1989 - பெய்ஜிங் நகரில் தியானான்மென் சதுக்கத்தில் ஏறத்தாழ 1,00,000 மாணவர்கள் சீர்திருத்தத் தலைவர் ஹீ யாபாங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டனர்.

1994 - சூரியக் குடும்பத்துக்கு வெளியே கோள்கள் இருப்பதை முதன் முதலில் வானியலாளர் அலெக்சாண்டர் வோல்ஸ்க்சான் அறிவித்தார்







All the contents on this site are copyrighted ©.