2009-04-18 16:10:05

ஐ.நா. சிறப்பு தூதர் விஜய் நம்பியார் இலங்கை அதிபரைச் சந்தித்துள்ளார்.


ஏப்.18, 2009: இலங்கையில் போர் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை காப்பாற்றும் நடவடிக்கையாக ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூனின் சிறப்பு தூதர் விஜய் நம்பியார் இலங்கை அதிபர் ராஜபக்க்ஷேவை சந்தித்து பேசியுள்ளார்.

போர் பகுதியில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை காப்பாற்றும் ஐ.நா. நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் இந்திய தூதரான விஜய் நம்பியாரை இலங்கைக்கு சிறப்பு தூதராக அனுப்பி வைத்துள்ளார் ஐ.நா. பொதுச் செயலர்.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை எனினும், “சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை காப்பாற்றுவது குறித்தும் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் இலங்கை அதிபருடன் விஜய் நம்பியார் பேச்சு நடத்தினார்” என்று ஐ.நா.அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையே, உடனடியாகவும் நிரந்தரமாகவும் போர் நிறுத்தத்தை அறிவித்து தமிழர்களின் அவலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுமாயின் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணத் தாங்கள் தயாராக உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.