2009-04-18 16:01:33

ஏப்ரல் 28 அன்று அப்ருஸ்ஸோ செல்கிறார் திருத்தந்தை


ஏப்.18,2009: இத்தாலியின் அப்ருஸ்ஸோ மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக ஏப்ரல் 28ந்தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அங்குச் செல்கிறார் என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி சே.ச. கூறினார்.

ஏப்ரல் 28ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் லாக்குய்லா சென்று அங்கு இப்பேரிடரில் பாதிக்கப்பட்ட மாணவர் விடுதி மற்றும் கொல்லெமாஜ்ஜோ பசிலிக்காவைப் பார்வையிடுவார் திருத்தந்தை.

பின்னர் நிதி பாதுகாப்பு மையத்தில் மக்கள் பிரதிநிதிகளையும் இடர்துடைப்புப் பணியாளரையும் அவர் சந்திப்பார் என்று திருப்பீடப் பேச்சாளர் கூறினார்.

உரோமைக்கு வடகிழக்கே ஏறத்தாழ 100 கிலோ மீட்டரில் இருக்கின்ற லாக்குய்லாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 300 பேர் வரை இறந்துள்ளனர். ஐம்பதாயிரத்துக்கு அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.