2009-04-17 18:36:47

வெனிசூலா ஆயர்குழுவின் அலுவலகத்தில் திருட்டு நடந்திருக்கிறது 170409.


வெனிசூலா ஆயர்குழுவின் அலுவலகத்தில் திருட்டு நடந்திருக்கிறது .இம்மாதம் 14 ஆம் தேதி ஆயர்மன்ற அலுவலகத்தின் உள்ளே நுழைந்த திருடர்கள் அங்கிருந்த ஆவணக் கோப்புகளை அள்ளிக் கீழே வீசியிருக்கின்றனர் .முக்கியமானது எதுவும் திருடு போகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதற்கான காரணம் தெரியவில்லை . ஆனால் வெனிசூலா நாட்டின் தலைவர் ஹூகோ சாவஸ் ஆயர்களை வன்மையாகக் கண்டித்து வருவதாகவும் , தலைவரின் ஆதரவாளர்கள் அலுவலகத்தில் சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் எனவும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது .








All the contents on this site are copyrighted ©.