2009-04-17 18:34:19

இலங்கையில் போர் நிறுத்தம் முடிவடைந்து மீண்டும் போர் 170409


இலங்கையில் போர் நிறுத்தம் முடிவடைந்து மீண்டும் போர் தொடர்ந்துள்ளது .தமிழ்ப் போராளிகளின் போர்நிறுத்த வேண்டுகோளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது . போர் நடக்கும் இடங்களில் நடக்கும் இரத்தக் குளியலை உடனடியாக நிறுத்த பகைமையை மறக்குமாறு ஐநா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது . ஒர் இலட்சம் மக்கள் போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ளதாகவும் , அவர்கள் மீட்கப்பட போரை நிறுத்த வேண்டும் என்றும் ஐநாவின் மனிதாபிமான மன்றத் தலைவர் ஜான் ஹோம்ஸ் அறிவித்துள்ளார் . பாதுகாப்பில்லாத அப்பாவி மக்கள் காப்பாற்றப்பட தாறுமாறாக போர் நடந்து வருவதையும் ஹோம்ஸ் கடுமையாகக் கண்டித்திருக்கிறார் . மக்கள் அடைக்கலமாகத் தங்கியிருக்கும் குறுகிய பகுதியில் இலங்கை அரசு குண்டு வீசித்தாக்குவதைத் ஐநா அதிகாரி கண்டித்துள்ளார் . இலங்கை அரசுத்தலைவர் பிடிவாதமாக போரைத் தொடர்ந்து போராளிகளை அழிப்போம் எனச் சூளுரைத்துக் கொண்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன . ஆயிரம் போராளிகளே மீதமிருப்பதாகவும் அவர்களை ஒழிக்கப் போவதாகவும் , போரை நிறுத்தினால் போராளிகள் வலுப் பெறுவார்கள் எனவும் அரசு கூறிக்கொண்டிருக்கிறது .








All the contents on this site are copyrighted ©.