2009-04-16 15:52:10

இந்தியக் கிறிஸ்தவத் தலைவர்கள் தேர்தல் களத்தில் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வலியுறுத்துகிறார்கள். 160409 .


தேசிய பாராளுமன்றத்துக்கு 545 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 5 கட்டமாக வாக்களிப்பு ஏப்ரல் 16 இந்த வியாழன் தொடங்குகிறது . மே மாதம் 13 ல் முடியும் தேர்தலின் முடிவுகள் மே 16 வெளியிடப்பட உள்ளது . 8 இலட்சம் வாக்குச் சாவடிகளில் 70 கோடி மக்கள் ஓட்டளிக்க உள்ளனர் . உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக இந்தியா விளங்குகிறது . நாட்டின் பல கிறிஸ்தவ மறைமாவட்டங்களிலும் நேர்மையான , திறமை மிக்க தலைவர்களைத் தேர்ந்தெடுக்குமாறு கிறிஸ்தவத் தலைவர்கள் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர் . அவ்வாறு செய்யத் தவறினால் தீய தலைவர்கள் வெற்றிபெறத் துணைபோகும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்., இந்து மத ஆன்மீகவாதிகளும் இதே கோரிக்கைகளை மக்களிடம் முன் வைத்துள்ளனர் . மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்ட தன்னார்வத் தொண்டர்கள் முனைப்பாக செயல்பட்டுவருகின்றனர் . ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஓட்டு அளிக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய பத்து வேண்டு கோள்களை இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் குழு வெளியிட்டிருந்தது . தங்களது பெயர்களைச் சரியாகப் பதியுமாறும் , உரிய நேரத்தில் ஓட்டளிக்கச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டிருந்தது . ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமென்றும் , தங்களுடைய உரிமைகளை மக்கள் இவ்வேளையில் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் ஆயர்கள் குழுவின் நீதி மற்றும் அமைதி ஆணயகத்துக்கான செயலர் தந்தை நித்திய சகாயம் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.