2009-04-16 15:54:29

ஆசிரியர்கள் கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றி ஆசிரியப்பணி புரிய அழைக்கப்படுகிறார்கள். 160409.


அமெரிக்காவின் கலிபோர்னியா மறைமாவட்டத்தில் இம்மாதம் 14 ஆம் தேதி தேசிய ஆசிரியர்கள் குழு கருத்தரங்கு நடந்தது . அதுபோது ஆசிரியர் புரியும் மகத்தான சேவைக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது . பேராயர் டோனால்டு அனுப்பியிருந்த மடலில் ஆசிரியர்கள் உலகில் மாபெரும் சக்தி எனத் தெரிவித்திருந்தார் . கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை நாம் தொலைதூரம் பயணம் செய்பவர்களுக்கு அறிவிக்கிறோம் என ஆசிரியர் குழுவின் தலைவர் காரன் ரிஸ்டோ தெரிவித்தார் . 3000 பேர் குழுமியிருந்த கருத்தரங்கில் கனடா , ஆஸ்திரேலியா , இத்தாலி , ஜப்பான் , பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் . கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அரிசோனாவின் ஆயர் ஜெரால்டு கிகானாஸ் நீங்கள் திருச்சபையின் நற்செய்தி அறிவிப்பில் பங்கேற்கிறீர்கள் என்றும் , விசுவாசத்தை பிறருக்கு வழங்குகிறீர்கள் என்றும் , இயேசுவோடு நல்ல உறவை வளர்க்கிறீகள் என்றும் உரை வழங்கினார் .








All the contents on this site are copyrighted ©.