2009-04-16 15:54:09

அமெரிக்காவின் க்யூபா நாட்டு மக்களுக்கான புதிய திட்டத்தை ஆயர்கள் வரவேற்கின்றனர். 160409.


அமெரிக்காவின் க்யூபா நாட்டு மக்களுக்கான புதிய திட்டத்தை ஆயர்கள் வரவேற்கின்றனர்.

அமெரிக்க ஆயர்கள் குழுவின் அகில உலக நீதி மற்றும் ம

அமைதி மன்றத்தின் தலைவர் ஆயர் ஹோவர்டு ஹப்பர்ட் அதிபர் பாரக் ஒபாமாவின் திட்டத்தை வரவேற்றுள்ளார் . இத்திட்டப்படி அமெரிக்காவில் வாழும் கியூபா நாட்டினர் தங்கள் உறவினர்களைக் காண சொந்த நாட்டுக்குத் திரும்பவும் , பணம் அனுப்புதற்கு இருந்த தடை நீக்கப்பட்டும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது . இது மிக்க காலதாமதமாக வருவதாகவும் , அமெரிக்காவின் முக்கியமான மாற்றம் எனவும் ஆயர் ஹோவர்ட் வர்ணித்துள்ளார் . கியூபாவுக்கு எதிரான 47 ஆண்டுகள் வாணிகத்தடை நீக்கப்படுவதற்கு இது முதல் படியாக இருக்கும் என்றும் , எவ்வாறு கியூபா இதை வரவேற்றுச் செயல்பட உள்ளது என்பதைப் பொறுத்தும் அடுத்த தடை நீக்கங்கள் வரும் என எதிர் பார்க்கப்படுகிறது . அமெரிக்க அரசின் இந்தப் புதிய திட்டம் நல்ல பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என கியூபா நாட்டைச் சேர்ந்த தந்தை ஜோஸ் எஸ்பினோ தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.