2009-04-15 14:12:50

நம்பிக்கையை மீண்டும் கண்டுபிடிப்பதற்கு கிறிஸ்துவின் உயிர்ப்பு நல்ல நேரம், பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில்


ஏப்ரல்15,2009. நம்பிக்கையை மீண்டும் கண்டுபிடிப்பதற்கும் கடவுளின் திட்டத்தைக் காண்பதற்கும் கிறிஸ்துவின் உயிர்ப்பு நல்ல நேரம் என்று இந்தியாவின் குவாஹாத்தி பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில் கூறினார்.

உரோம் கொலோசேயத்தில் திருத்தந்தையின் தலைமையில் நடைபெற்ற புனித வெள்ளி சிலுவைப்பாதை தியானங்களை எழுதிய பேராயர் மெனாம்பரம்பில், சோதனைகள் மற்றும் நெருக்கடி நேரங்களில் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதில் எப்பொழுதும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டுமென்று இந்திய கிறிஸ்தவர்க்கு கூறினார்.

இந்தியா, பொதுத் தேர்தல்களைத் தொடங்கவுள்ள இவ்வேளையில், நம்மை ஒன்றிணைக்கும் காரியங்களைச் செய்வதற்கும், புரிந்து கொள்வதன் பாலங்களைக் கட்டுவதற்கும் உழைக்குமாறும் பேராயர் வலியுறுத்தினார்.

கிறிஸ்துவின் உயிர்ப்பு, புதுவாழ்வையும் நம்பிக்கையையும் நம்மில் ஊட்டுகிறது என்ற அவர், தீமையின் இருள் ஒளியை வெற்றி கொள்வது போல் தோன்றலாம், ஆனால் உயிர்த்த கிறிஸ்து தமது உயிர்ப்பில் இருளை அப்புறப்படுத்தியுள்ளார் என்றார்.

 








All the contents on this site are copyrighted ©.