2009-04-15 14:15:56

இந்தியாவின் சமயச்சார்பற்ற தன்மை அச்சுறுத்தலில் இருக்கின்றது, ஒரிசா பேராயர்


ஏப்ரல்15,2009. இந்தியாவில் சில அரசியல் கட்சிகள், தாங்கள் மக்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் உண்மை நிலவரம் அதற்கு மாறாக இருக்கிறது என்று ஒரிசாவின் கட்டாக்-புவனேஷ்வர் பேராயர் இரபேல் சென்னத் கூறினார்.

இந்தியாவின் சமயச்சார்பற்ற தன்மை அச்சுறுத்தலில் இருக்கின்றது, ஒவ்வோர் அரசியல் கட்சியும் அதனதன் ஆதாயத்திற்காகச் செயல்படுகிறது, எந்தக் கட்சியும் ஏழை மக்களில் கரிசனை காட்டுவதாகத் தெரியவில்லை என்று பேராயர் சென்னத் மேலும் கூறினார்.

மனிதமற்ற கொடூரங்களை அனுபவித்த மக்கள், அநீதிகளால் மட்டுமல்ல, தங்கள் மூதாதையர் பகுதிகளிலிருந்து முழுவதும் அப்புறப்படுத்தப்படுவதும், கேள்விகளால் நச்சரிக்கப்படுவதும் பயமூட்டப்படுவதும் போன்ற துன்பங்களைத் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர் என்றார் அவர்.

பொதுத் தேர்தல் தனக்கு கவலை தருவதாகத் தெரிவித்த பேராயர் சென்னத், தேர்தலுக்குப் பின்னான புதிய அரசு கிறிஸ்தவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் என்பதறகு உத்தரவாதம் இல்லை என்றார்.

கந்தமால் மாவட்டத்தில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட அகதிகள் அரசின் முகாம்களிலும், இன்னும் பலர் அரசு சாரா முகாம்களிலும் வாழ்கின்றனர். பலர் ஒரிசாவை விட்டே வெளியேறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.