2009-04-14 15:02:38

அமெரிக்க கத்தோலிக்கர் தங்களது திருச்சபை பற்றி பொதுவாக நல்லெண்ணம் கொண்டிருக்கின்றனர்


ஏப்ரல்14,2009. அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கர் தங்களது திருச்சபை பற்றி பொதுவாக நல்லெண்ணம் கொண்டிருக்கிறார்கள் என்று அந்நாட்டில் வெளியான ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.

தற்போதைய கத்தோலிக்கரின் போக்கு பற்றி ஆய்வு நடத்திய மோய்ன் ஜோக்பி என்ற அமைப்பு, நான்கில் மூன்று பகுதி கத்தோலிக்கரிடம் எடுக்கப்பட்ட ஆய்வின்படி 36 விழுக்காட்டினர் திருச்சபை பற்றி மிகுந்த நல்லெண்ணம் கொண்டிருப்பதாகவும், 37 விழுக்காட்டினர் ஓரளவு நல்லெண்ணம் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

கத்தோலிக்க விசுவாசத்திற்கு திருவருட்சாதனங்கள் மிகவும் முக்கியம் என்று 87 விழுக்காட்டினருக்கு அதிகமானோரும், திருவருட்சாதனங்கள் மிகவும் முக்கியம் என்று 64.4 விழுக்காட்டினரும் கூறியதாக அவ்வாய்வு கூறுகிறது.

மரியா, கடவுளின் தாய் என்ற போதனை, தங்களது விசுவாசத்திற்கு மிகவும் முக்கியம் என்று 80 விழுக்காட்டினருக்கு அதிகமானோரும், இத்தகைய போதனைகள் முக்கியம் என்று 53.3 விழுக்காட்டினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏழைகள் மீதான திருச்சபையின் கரிசனை தங்களது விசுவாசத்திற்கு மிகவும் முக்கியம் என்று 89 விழுக்காட்டினருக்கு அதிகமானோரும், இது மிகவும் முக்கியம் என்று 60.9 விழுக்காட்டினரும் கூறியுள்ளனர்.

வாரம் ஒருமுறை திருப்பலியில் பங்கு கொள்வது முக்கியம் என்று 58.3 விழுக்காட்டினரும், இது மிகவும் முக்கியம் என்று 30.1 விழுக்காட்டினரும் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.