2009-04-13 14:11:14

வாக்காளர்களுக்குப் பத்துக் கட்டளைகள்


ஏப்ரல் 13, 2009. இந்தியாவில் ஏப்ரல் 16, வருகிற வியாழனன்று பொதுத் தேர்தல்கள் தொடங்கவுள்ள வேளை, வாக்காளர்களுக்குப் பத்துக் கட்டளைகளைப் பரிந்துரைத்துள்ளது இந்திய ஆயர் பேரவையின் அதிகாரப்பூர்வ இணையதளம்.

வாக்காளர் அட்டையில் புகைப்படத்தோடு பெயர் இருப்பதைக் கவனித்தல், இந்த அட்டையில் பெயர்கள்ப் பதிவு செய்வதற்கு ஏழைகளுக்கும் ஓரங்கட்டப்பட்டோருக்கும் நலிந்தோருக்கும் உதவுதல், பழங்குடி இனத்தவர், தலித்துகள், சிறார், பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோர் நலன் கருதும் வேட்பாளர்களைத் தேர்வு செய்தல், முந்தைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத வேட்பாளர்களைப் புறக்கணித்தல், எந்தக் கட்சியிடமிருந்தும் எந்த வேட்பாளரிடமிருந்தும் இலஞ்சம் வாங்காதிருத்தல், வாக்குச் சாவடிக்கு காலையிலேயே சென்று ஓட்டை பதிவு செய்து பிறரும் பதிவு செய்யத் தூண்டுதல், ஓட்டுக்காக இலஞ்சம் வாங்குபவர் குறித்து சம்பந்தப்பட்ட ஆணையத்திற்கு உடனடியாக அறிவித்தல் போன்ற ஆலோசனைகளை வழங்கியுள்ளது இந்திய ஆயர் பேரவையின் அதிகாரப்பூர்வ இணையதளம்.








All the contents on this site are copyrighted ©.