2009-04-13 14:06:08

வரலாற்றில் ஏப்ரல் 14


புனித திபார்தியுஸ், மாக்சிமஸ் மற்றும் வலேரியன் விழா. திபார்தியுசும் வலேரியனும் புனித செசிலியாவின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு மனம் மாறியவர்கள். இவர்கள், மாக்சிமுஸ் என்ற கொடுங்கோல் அரசனால் கொல்லப்பட்டனர்.

இதேநாள், 966- போலந்து கிறிஸ்தவ நாடானது.

1699 - கால்சா என்ற சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு குருகோவிந்த் சிங் அடிக்கல் நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது

1865 - அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார்

1891- இந்திய சட்ட நிபுணர் டாக்டர் அம்பேத்கார் பிறந்தார்

1912 - பிரித்தானியாவின் பயணிகள் கப்பல் டைட்டானிக் வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது. அடுத்த நாள் இது 1,503 பேருடன் கடலில் மூழ்கியது

1950 - தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ரமண மகரிஷி இறைவனடி எய்தினார்








All the contents on this site are copyrighted ©.