2009-04-07 15:14:35

எருசலேம் இலத்தீன் ரீதி பிதாப்பிதாவின் உயிர்ப்பு விழாச் செய்தி


ஏப்ரல்07,2009. இயேசுவின் பாடுகளைக் கொண்ட இப்பாஸ்கா காலத்தோடு தொடர்புடைய நபர்கள் யாவரும் நம் வாழ்விலும் காணப்படுகின்றார்கள் எனத் தன் உயிர்ப்பு விழாச் செய்தியில் எருசலேம் இலத்தீன் ரீதி பிதாப்பிதா பேராயர் பவுட் த்வால்.

இயேசுவின் பாடுகளில் நாம் பங்கெடுப்பது மட்டுமல்ல, அது நம்முள்ளும் நடக்கிறது என்ற பிதாப்பிதா இயேசுவின் துன்பங்களை நம் வாழ்வில் நாமும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது, அதேவேளை பேதுருவைப் போல தாராள மனதுடையவராகவும் எளிதில் உணர்ச்சிவசப்படுபவராகவும் யூதாஸ், பிலாத்து, தலைமைக் குருக்கள் போல் இரக்கமின்றி செயல்படுபவர்களாகவும் மக்கட்கூட்டத்தைப் போலவும் அன்னைமரி போலவும் பல்வேறு குணங்களில் நம் வாழ்வில் நாம் செயல்படுகிறோம் எனவும் தனது செய்தியில் கூறியுள்ளார்.

எல்லா வேளைகளிலும் நம்மைக் கவர்பவரும், நம்மைத் தொடுபவரும் நம்மை மாற்றியமைப்பவரும் இயேசுவே என்பதை மறந்து விடாமல் அவரிலேயே நம் பார்வையை பதித்தவர்களாய் நாம் செயல்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் எருசலேம் இலத்தீன் ரீதி பிதாப்பிதா பேராயர் பவுட்

இயேசுவின் உயிர்ப்பின் மூலமும் பெறப்பட்டுள்ள மீட்பு அனைத்து மனித குலத்திற்கும் அறிவிக்கப்பட வேண்டிய ஒன்று எனவும் தன் செய்தியில் கூறியுள்ளார் பிதாப்பிதா.








All the contents on this site are copyrighted ©.