2009-04-05 17:50:58

தவக்காலச் சிந்தனை நாள் 060409 .


நற்செய்தி. யோவான் 12 , 1- 11 .



வில்லியம் பார்க்லே என்னும் விவிலிய அறிஞர் யூதாசின் மரியாவின் தைலம் பூசிய செயலுக்குக் காட்டிய எதிர்ச் செயல் பற்றி இவ்வாறு கூறுகிறார் . மிக அருமையான செயல் ஒன்றை யூதாசு பார்த்தார் . அதை அவர் தேவையில்லாத செலவு என்றார் . வாழ்வில் கசப்பான உணர்வுகளையே கொண்டிருந்த யூதாசு வாழ்வைப்பற்றி கசப்பான பார்வையே கொண்டிருந்தார் . யூதாசின் செயல் ஒரு தத்துவத்தை நன்கு விளக்குகிறது . நாம் பிறிதொன்றை அது இருப்பது போலப் பார்ப்பதில்லை . நாம் எப்படி பழக்கப்பட்டிருக்கிறோமோ அப்படியே பார்க்கிறோம் .

நாம் ஒருவருக்கு எதிராகச் செயல்படும் தப்பெண்ணம் கொண்டிருந்தால் அந்த நபர் நம் பார்வையில் எதுவுமே நல்லது செய்யமுடியாது எனத் தீர்ப்பிடுகிறோம் . ஒருவருக்குச் சார்பாக நாம் இருக்கும்போது நம் பார்வையில் அவர் எந்தவிதமான தவறுமே செய்யவதில்லை . யூதாசு மரியாவுக்கு எதிராகத் தப்பெண்ணம் கொண்டிருந்தார் .








All the contents on this site are copyrighted ©.