2009-04-05 18:02:17

தவக்காலச் சிந்தனை புதன்கிழமை 080409


நற்செய்தி மத்தேயு 26 ,14 – 25 .



யூதசால் அவருடைய திட்டங்களை மற்ற சீடர்களிடமிருந்து மறைக்க முடிந்தது . ஆனால் இயேசுவிடமிருந்து மறைக்கமுடியவில்லை . இங்கு நாம் எப்படி இயேசு பாவிகளிடம் நடந்து கொள்கிறார் எனக் காண்கிறோம் . வாழ்க்கையில் மிகப் பெரிய மறைபொருள் , புரியாத புதிர் கடவுள் அளவில்லாத அளவு மனிதருடைய மனச் சுதந்திரத்துக்கு மதிப்புக் கொடுக்கிறார் எனபதாகும் .

இயேசு பாவிகளைக் கட்டாயப்படுத்தி வாழ்வில் மாற்றம் கொண்டுவரச் செய்யவில்லை . மாற்றம் பெறுமாறு அழைப்பு விடுத்தார் . மாற்றம் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டார் . யூதாசின் ஒவ்வொரு அடியெடுத்தலிலும் இயேசு இதமாகவே நடந்து கொண்டார் . யூதாசை அவர்கள் குழுமத்தின் பணப் பொருப்பாளராக நியமித்தார் . இறுதி இராவுணவை மற்றவர்களோடு சேர்ந்து உண்பதற்கும் அழைத்திருந்தார் .

நம் வாழ்வை மேம்பட்ட நிலைக்கு மாற்றுமாறு இயேசு அழைப்பு விடுக்கும்போது நாம் அவர் அழைப்பை மனதார ஏற்றுக் கொள்கிறோமா .அன்புதான் ஒன்றை அழித்துவிடாது மாற்றக் கொண்டுவரக்கூடிய சக்தியைக் கொண்டது என்கிறார் ஞானி தெய்யார்டு தெ சார்தான் .








All the contents on this site are copyrighted ©.