2009-04-04 14:41:59

கந்தமாலில் தேர்தல்களைத் தள்ளி வைக்க பேராயர் வேண்டுகோள்


ஏப்ரல்04,2009. இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் இம்மாதம் 16க்கும் 23ம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களைத் தள்ளி வைக்குமாறு அம்மாநில பேராயர் இரபேல் சென்னத் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுள்ளார்.

கந்தமால் மாவட்டத்தில் வன்முறைகளும் பதட்டநிலைகளும் தொடர்ந்து இடம் பெறும் வேளை, அகதிகளுக்கும் புலம் பெயர்ந்துள்ளவர்களுக்கும் ஓட்டளிப்பதற்கான உரிமைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டுமென்று கட்டாக் புவனேஷ்வர் பேராயர் சென்னத் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கந்தமால் மாவட்டத்தின் இந்நிலைமையில், தேர்தல்களைத் தள்ளி வைப்பதே தீர்வாக இருக்கும் என்றும் அவர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கந்தமால் மாவட்டத்தில் அம்மாவட்டத்தில் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்களும் தலித்துகளும் வன்முறையை எதிர்நோக்குகின்றனர் என்ற அவர், அரசு நடத்தும் முகாம்களில் இன்னும் ஏறக்குறைய 3200 பேர் துன்பப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.