2009-04-02 20:21:01

வருவாய்க்கு முன்னர் மனிதனுக்கு முதலிடம் கொடுக்குமாறு வலியுறுத்துகிறார் கர்தினால் பெர்த்தோனே . 020409 .


சென்ற ஞாயிறிலிருந்து செவ்வாய்வரை எட்டு நாடுகளின் உச்ச மாநாடு உரோமையில் நடந்தது . இக் கருத்தரங்கில் நல வாழ்வுத்திட்டங்களை ஊக்குவிப்பது பற்றியும் , மக்களுக்கு வேலை வாய்ப்பைத் தருவது பற்றியும் ஆராயப்பட்டது . பிரிட்டன் , கனடா , பிரான்ஸ் , ஜெர்மனி , இத்தாலி , ஜப்பான் ரஷ்யா மற்றும் அமெரிக்க ஐ நாடுகள் இதில் கலந்து கொண்டன . இந்தியாவிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர் .

அக்கருத்தரங்குக்குச் செய்தி அனுப்பிய கர்தினால் பெர்த்தோனே தற்போது உருவாகியிருக்கும் பொருளாதாரச் சிக்கல் மனிதர்களை முன்வைக்காமல் வருவாய்க்கு முதலிடம் கொடுத்ததே காரணம் எனக் கூறியுள்ளார் . இந்த உச்ச மாநாட்டின் தலைவர் இத்தாலியின் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மவுரீசியோ சக்கோனிக்கு அனுப்பிய மடலில் பொதுநலத்தையும் மனித மாண்பையும் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனே .








All the contents on this site are copyrighted ©.