2009-04-02 20:19:31

புதிய ஆயிரமாவது ஆண்டின் வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் பற்றிக் கேள்வி எழுப்புகிறார் பேராயர் செலஸ்தீனோ மிலியோரே. 020409


நியூயார்க்கிலிருந்து இயங்கும் ஐ . நாடுகள் சபையில் திருப்பீடத்தின் பிரதிநிதியாக நிரந்தர உறுப்பினராக இருப்பவர் பேராயர் செலஸ்தீனோ மிலியோரே . உலக மக்களின் , முக்கியமாக வளரும் நாடுகளில் மக்களின் வளமான வாழ்வுக்கான

வளர்ச்சித் திட்டங்கள் செயல் புரிகின்றனவா எனக் கேட்டார் பேராயர் . ஏப்ரல் திங்கள் முதல் நாள் மக்கள் வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய 42 ஆவது ஐ . நா வின் பொதுக்குழு அமர்வு நியூயார்க்கில் நடந்தது .



அங்கு பேசிய பேராயர் மிலியோரே வளர்ந்த நாடுகள் தம் நாடுகளில் மக்கள் தொகையைப் பெருக்கிட திட்டங்கள் வகுக்கும்போது வளரும் நாடுகளில் மக்கள் தொகையைக் குறைக்கச் சொல்வது முரண்பாடாக இருக்கிறது எனத் தெரிவித்தார் .சுற்றுப்புறத்தைச் சீரழிப்பது மக்கள் தொகை குறைவாக உள்ள வளர்ந்த நாடுகளே எனச் சுட்டிக்காட்டினார் . மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது என்பதும் வளமான வாழ்வின் வளர்ச்சியைப் பெருக்குவதும் மிக முக்கியமான செயல் திட்டங்கள் என்று பேராயர் வலியுறுத்தினார் . இதில் மக்கள் வளர்ச்சிக்கே முதலிடம் தரப்படவேண்டும் எனப் பேராயர் தம் கருத்தை முன் வைத்தார் . கல்வி , பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்புக்கள் , அரசியல் திடநிலை , அடிப்படை உடல் நலப்பாதுகாப்பு , குடும்ப வாழ்வுக்கு துணைபுரிதல் போன்றவை ஆயிரமாவது ஆண்டில் அடைய வேண்டிய குறிக்கோள்கள் என பேராயர் செலஸ்தீனோ மிலியோரே நியூயார்க்கின் 42 ஆவது மக்கள் நல வாழ்வுக்கான சமூக வளர்ச்சி பற்றிய கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார் .








All the contents on this site are copyrighted ©.