2009-04-02 13:55:18

ஏப்ரல் 03 வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


புனிதர்கள் திருத்தந்தை முதலாம் சிக்ஸ்துஸ், ரிச்சர்ட், எகிப்து நாட்டு மேரி ஆகியோர் விழா. ஆயரான புனித ரிச்சர்ட் புனித பூமியைக் காப்பதற்காக உழைத்தவர். கடவுள் வாக்குத் தவறுவதில்லை. அவருக்காக ஆர்வத்துடன் சேவை செய்தால் அவர் நமது தேவைகளைக் கவனித்துக் கொள்வார் என்று சொன்னவர.,

இதே நாளில் 1287ல் திருத்தந்தை 4ம் ஒனோரியுஸ் இறந்தார். இவர் 1285 முதல் 1287 வரை ஈராண்டுகள் பாப்பிறையாக பணியாற்றியவர்.

1966ம் ஆண்டு சோவியத்தின் லூனா10 என்ற விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தை அடைந்தது. பூமியை விட வேறொரு விண் பொருளைச் சுற்ற ஆரம்பித்த முதலாவது விண்கலம் இதுவாகும்

1973 - உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பு நியூயார்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது.

1680 – இந்தியாவில் மராட்டியப் பேரரசை நிறுவிய வீர சிவாஜி இறந்தார்

2007 - ஆசியாவின் மிகப்பணக்காரப் பெண்ணான நீனா வாங் இறந்தார்



 








All the contents on this site are copyrighted ©.