2009-03-30 15:21:30

வரலாற்றில் மார்ச் 31.


புனித பெஞ்சமின் விழா. இவர், பாரசீக நாட்டில் வேத கலகத்தின் போது துன்புறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டவர்.

இதேநாளில், 1499 திருத்தந்தை 4ம் பத்திநாதர் பிறந்தார்.

1889 – உலக அதிசயங்களில் ஒன்றான பாரிசிலுள்ள ஈபெல் கோபுரத்தின் தொடக்க விழா நடத்தப்பட்டது.

1917 - அமெரிக்க ஐக்கிய நாடு, டென்மார்க்கிடம் 2 கோடியே 50 இலட்சம் டாலர் பணம் கொடுத்து டானிஷ் மேற்கிந்தியத் தீவுகளை வாங்கி அவற்றிற்கு அமெரிக்க கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றியது.

1959 - டென்சின் கியாட்சோ என்ற திபெத்தின் 14வது தலாய் லாமாவுக்கு, இந்தியாவில் அரசியல் அடைக்கலம் வழங்கப்பட்டது.

1979 - கடைசி பிரித்தானியப் படையினர் மால்ட்டாவை விட்டு விலகினர். மால்ட்டாவும் விடுதலை தினத்தை அறிவித்தது

2007 - ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கடைபிடிக்கப்பட்ட முதலாவது பூமி நேரத்தில் 22 இலட்சம் பேர் பங்கு கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.