2009-03-30 15:37:16

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவி பொது மக்களின் தேவைகள் உடனடியாக செவிசாய்க்கப்பட வேண்டும், இலங்கை கத்தோலிக்க, ஆங்கிலிக்கன் ஆயர்கள் அழைப்பு


மார்ச்30,2009. இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவி பொது மக்களின் தேவைகளுக்கு உடனடியாக செவிசாய்க்க வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கும் தமிழ்ப போராளிகளுக்கும் அந்நாட்டின் கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்கன் ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம், மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு, அனுராதபுர ஆயர் நார்பெர்ட் அந்த்ராதி ஆகியோருடன் இணைந்து ஆங்கிலிக்கன் ஆயர்கள் குமார இல்லன்காசிங்கே, துலீப் தெ சிக்கேரா ஆகியோரும் இவ்விண்ணப்பத்தை முன்வைத்தனர்.

பொது மக்கள் மீதான குண்டு தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு உணவு உதவிகள் செந்றடைய இருதரப்பினரும் உதவ வேண்டும் என ஆயர்களின் அறிக்கை அழைப்புவிடுக்கிறது.

இதற்கிடையே, கடந்தசில நாட்களில் மட்டும் அரசின் பாதுகாப்புப் பகுதியில் பொது மக்கள் மீது நடத்தப்படட் இராணுவ தாக்குதலில் 131 பேர் கொல்லப்பட்டுள்ளதாக டமிள்நெட் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது







All the contents on this site are copyrighted ©.