2009-03-27 19:56:27

எரித்திரேயாவில் மனித உரிமை மீறல் நெருக்கடி அதிகரித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன .270309 .


ஆப்பிரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள எரித்திரேயாவில் மனித உரிமை மீறல் நெருக்கடி அதிகரித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன . மதச் சண்டைகளும் நெருக்கடியை அதிகப்படுத்துவதாகத் தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன .

பசிப்பிணியிலிருந்தும் , அடக்குமுறை அட்டூழியத்திலிருந்தும் தப்பிக்க எரித்திரேய மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் அண்டை நாடுகளில் குழப்பத்தை உருவாக்குவதாகவும் தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன . தேவையில் இருப்போருக்கு உதவி என்ற கிறிஸ்தவத் தொண்டு நிறுவனம் அந்நாட்டில் தொடர்ந்து நீடிக்கும் வறட்சி காரணமாகவும் , அறுவடை இல்லாததாலும் பஞ்சத்தின் பிடியில் உள்ளதாக இவ்வாரம் புதனன்று தெரிவித்துள்ளது . சமயவாதிகளுக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுவதால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகத் தெரிகிறது . வறுமையில் சாகும் மக்களுக்கு உணவுப் பொருள்களை வரவிடாது தடை செய்துள்ளது எரித்திரேய அரசு . கடைகளில் உணவு விற்பனையையும் தடை செய்துள்ளது எரித்திரேய அரசு . வெளிநாட்டு உதவிகளை மறுப்பதால் நிலைமை மிக மோசமாகி , நாடு அழிவுப்பாதையில் போய்க் கொண்டிருப்பதாக தேவையில் இருப்போருக்கு உதவி என்ற நிறுவனம் தெரிவிக்கிறது .








All the contents on this site are copyrighted ©.