2009-03-27 19:45:44

எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த நன்னெறிக் கல்வி தேவை என்கிறார் செனகல் நாட்டின் பேராயர் கர்தினால் . 270309 .


மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் நாட்டின் டாக்கார் மறைமாவட்டப் பேராயர் தியோடோர் ஆட்ரியன் சார் இவ்வாரம் செவ்வாயன்று வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்தார் . அதுபோது அவர் அந்நாட்டின் தலைவர் அப்தோ டியூப்பின் வேண்டுகோளின்படி அந்நாட்டில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமயங்கள் எய்ட்ஸ் நோயைத் தடுப்பதில் முனைப்பாக இருப்பதாகத் தெரிவித்தார் . நோயைத் தடுக்க ஒருவன் ஒருத்தி என்ற நன்னெறி வாழ்க்கைத் திட்டமும் தவறான பாலின உறவுகளைத் தவிர்ப்பதுமே நலம் பயக்கும் எனத் தெரிவித்துள்ளார் . சமயங்களின் அறிவுரை காரணமாக செனகல் நாட்டில் எய்ட்ஸ் வியாதி கட்டுப்பாட்டு்க்குள் இருப்பதாக மேலும் தெரிவித்தார் பேராயர் தியோடோர் சார் . நன்னெறிக் கொள்கைகளும் ஒழுக்கமான மதிப்பீடுகளுமே எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் மருந்தாகும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.