2009-03-25 14:49:01

பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்காத நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம், பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு


மார்ச் 25,2009. பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டும் அக்குற்றங்களைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத தெற்கு ஆசியாவில், அவர்கள் பல்வேறு ஆபத்துக்களை எதிர்நோக்குகின்றனர் என்று நியூயார்க்கை மையமாக் கொண்டு இயங்கும் பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பத்திரிக்கையாளர்கள் தாக்குதலுக்கு உண்டாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறும் அவ்வமைப்பு, பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்காத நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தெற்காசியாவில் இலங்கையிலும், பாகிஸ்தானிலும் அதிக அளவில் பத்திரிக்கையாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்றும் பிலிப்பைன்ஸில் அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுவது மற்றும் தாக்கப்படுவது குறித்து அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நாடுகளின் பட்டியலில் இலங்கை, பாகிஸதான் உட்பட இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இருப்பதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.