2009-03-25 14:46:13

உலகில் அமைதிப் பணியாற்றும் ஐ.நா பணியாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் இரட்டிப்பாக்கப்பட ஐ.நா. பொதுச் செயலர் வலியுறுத்தல்


மார்ச்25,2009. உலகில் அமைதிப் பணியாற்றும் ஐ.நா பணியாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் இரட்டிப்பாக்கப்படுமாறு ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் வலியுறுத்தினார்.

கடத்தி வைக்கப்பட்டுள்ள மற்றும் காணாமற்போயுள்ள ஐ.நா.பணியாளர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் சர்வதேச தினம் இன்று கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட மூன் இவ்வாறு கூறினார்.

மோதல்கள் இடம் பெறும் பகுதிகளைச் சேர்ந்த மனிதாபிமான மற்றும் ஐ.நா.பணியாளர்கள் மிகுந்த ஆபத்துக்களை எதிர் நோக்குகின்றனர் என்றும் மூன் கூறினார்.

பாகிஸ்தானில் ஐ.நா. அகதிப்பணி மையத் தலைவர் ஜான் சொலேக்கி கடத்தப்பட்டு 50 நாட்கள் ஆகியுள்ள வேளை அவரின் விடுதலைக்காவும் விண்ணப்பம் எழுப்பப்பட்டுள்ளது.

சுமார் 120 நாடுகளில் ஆறாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஐ.நா. அகதிப்பணியில் வேலை செய்கின்றனர்.

2007க்கும் 2008க்கும் இடைப்பட்ட காலத்தில் 160 ஐ.நா.பணியாளர்கள் தல அரசு அதிகாரிகளாலும் 39 பேர் எதிர்தரப்பாலும் கைது செய்யப்பட்டனர்.








All the contents on this site are copyrighted ©.