2009-03-24 14:20:59

ராஞ்சியில் மருத்துவ கல்லூரி துவங்கப்பட இந்திய ஆயர் பேரவை பரிந்துரை, கர்தினால் டோப்போ


மார்ச்24,2009. இந்திய கத்தோலிக்கத் திருச்சபை அந்நாட்டில் நடத்திவரும் 5525 நலஆதரவு அமைப்புகள் மூலம் ஏழைகள் மற்றும் சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டோரின் நலவாழ்வுக்காக முதன்மை முக்கியத்துவம் கொடுத்து உழைத்து வருவதாக அறிவித்தார் கர்தினால் டெலஸ்போர் டோப்போ.

ஏழைமக்களுக்கு உழைப்பதற்கெனவே வடஇந்தியாவின் ராஞ்சியில் பெங்களூர் புனித ஜான்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை போல் ஒன்று துவங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை இந்திய ஆயர் பேரவையால் முன்வைக்கப்பட்டுள்ளது பற்றியும் குறிப்பிட்ட ராஞ்சி பேராயர் கர்தினால் டோப்போ, இந்தியாவில் அரசுக்கு அடுத்து மிகப்பெரிய அளவில் நலஆதரவுப் பணியாளர்களைக் கொம்டு சேவையாற்றி வருவது தலத்திருச்சபையே எனவும் கூறினார்.

உலகெங்கும் சென்று போதிக்கவும் குணப்படுத்தவும் அழைப்புவிடுத்த இயேசுவின் வழிகளைப் பின்பற்ரியே அவரைப் போல் நன்மைத்தனங்களை ஆற்றிவர திருச்சபை ஆவல்கொள்கிறது எனவும் கூறினார் கர்தினால் டோப்போ.








All the contents on this site are copyrighted ©.