2009-03-24 15:39:17

தலாய் லாமா குறித்த தென்னாப்ரிக்க அரசின் செயல்பாட்டிற்கு கர்தினால் நாப்பியர் வருத்தம்


மார்ச்24,2009. தென்னாப்ரிக்காவில் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள விரும்பிய புத்தமதத் தலைவர் தலாய் லாமாவுக்கு நாட்டிற்குள் நுழைவதற்கான அனுமதி மறுத்துள்ள தென்னாப்ரிக்க அரசின் செயல்பாடு குறித்து அதிர்ச்சி மற்றும் வருத்தத்தை வெளியிட்டுள்ளார் கர்தினால் வில்பிரட் நாப்பியர்.

அமைதிமனிதர்களின் தூண்டுதல் தேவைப்படும் தென்னாப்ரிக்க நாடு ஓர் அமைதி மனிதருக்கு அனுமதி மறுத்துள்ளது குறித்து ஆழ்ந்த கவலை கொள்வதாகக் கூறிய கர்தினால், மீண்டுமொருமுறை மதவிடுதலையும் கருத்து சுதந்திரமும், பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக விற்கப்பட்டுள்ளனவோ என சந்தேகிப்பதாகவும் உரைத்தார்.

1989ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது பெற்ற தலாய் லாமாவை அமைதி கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள தடைவிதிக்கும் தென்னாப்ரிக்க அரசின் கொள்கை குறித்து தன் வன்மையான கண்டனத்தை நொபெல் அமைதி விருது பெற்ற ஆங்கிலிக்கந் பேராயர் டெஸ்மண்ட் டுடுவும் வெளியிட்டுள்ளார்







All the contents on this site are copyrighted ©.