2009-03-23 16:00:14

இலங்கையில் மதமாற்றத்தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஏப்ரல் மூன்றாம் தேதியை செபம் மற்றும் உண்ணா நோன்பு நாளாக கடைபிடிக்க அழைப்பு


மார்ச்23,2009. இலங்கை நாடாளுமன்றத்தின்முன் வைக்கப்பட்டிருக்கும் மதமாற்றத்தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஏப்ரல் மூன்றாம் தேதியை செபம் மற்றும் உண்ணா நோன்பு நாளாக அறிவித்துள்ளது தலத்திருச்சபை.

ஏற்கனவே உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை நாட்டில் மேலும் ஒருமத அடிப்படையிலான போர் தவிர்க்கப்பட்டு ஒப்புரவு இடம்பெற வேண்டுமென அழைப்புவிடுக்கும் இலங்கை ஆயர்கள், ஏப்ரல் மூன்றாம் தேதி செபம் மற்றும் உண்ணா நோன்பு கடைபிடிக்கபப்டும் போது திரட்டப்படும் நிதி நாட்டின் வடபகுதியில் போரால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கென அனுப்பப்படும் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் மதசுதந்திரத்திற்காக கத்தோலிக்க நிறுவனங்கள் மட்டுமல்ல, நல்மனம் கொண்ட அனைவரும் ஏப்ரல் மூன்றாம் தேதியை செபம் மற்றும் உண்ணா நோன்பு நாளாகக் கடைபிடிக்க வேண்டுமெனவும் ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

இலங்கை வரலாற்றில் கடந்த 25 ஆண்டுகளில் கட்டாய மதமாற்றம் குறித்த எவ்விதப் புகாரும் இல்லை எனினும் மதமாற்றத்தடைச் சட்டத்தை நிறைவேற்ற புத்தபிக்குகள் தீவிரமாக முயன்றஉ வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.