2009-03-21 14:05:00

போதைப்பொருள் பயன்பாட்டை போதைப்பொருளை வைத்தே தடுக்க முயற்சிப்பது இயலாதது, திருப்பீடம்


மார்ச்21,2009. போதைப்பொருள் பயன்பாட்டை போதைப்பொருளை வைத்தே தடுக்க முயற்சிப்பது இயலாதது என்று திருப்பீடம் சர்வதேச சமுதாயத்தை எச்சரித்தது.

வியன்னாவில் இவ்வெள்ளிக்கிழமை நிறைவு பெற்ற போதைப் பொருள் தடுப்புக்கான ஐ.நா.அவையில் உரையாற்றிய மேய்ப்புப்பணி உதவிகளுக்கான திருப்பீட அவையின் செயலர் ஆயர் ஹோசே லூயிஸ் ரெத்ராதோ மர்க்கித்தே, இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் உலகளாவிய கத்தோலிக்க நலப்பணி நிறுவனங்களின் அனுபவங்களின் அடிப்படையில் பேசினார்.

வீரியம் குறைந்த போதைப்பொருள்களை விநியோகிப்பதை அடிப்படையாகக் கொண்டு மிகவும் வீரியமான போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்குப் பல நாடுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆயர் மர்க்கித்தே கூறினார்.

இவ்வாறு செய்வது காலப்போக்கில் நிலைமையை மேலும் மோசமாக்குகினறது என்று கத்தோலிக்க நலப்பணி நிறுவனங்களின் அனுபவங்கள் தெரிவிக்கின்றன என்றும், இப்பிரச்சனைக்கான அடிப்படைக் காரணமான வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்பதற்கு இத்தகைய நடவடிக்கை பதில் அளிப்பதில்லை என்றும் ஆயர் மர்க்கித்தே கூறினார்







All the contents on this site are copyrighted ©.