2009-03-21 14:08:59

கருத்தடை சாதனங்கள் குறித்த திருத்தந்தை 16ம் பெனடிக்டின் நிலைப்பாட்டிற்கு இரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் திருச்சபை ஆதரவு


மார்ச்21,2009. எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கெனக் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவது, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாக இருக்க முடியாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சொல்லியுள்ள கருத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது இரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் திருச்சபை.

இரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையின் ப்ரெஞ்ச் மொழியிலான இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில், எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கான வழிமுறைகளில் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் நிலைப்பாட்டிற்கு இரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் பிதாப்பிதா தனது ஆதரவைத் தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆப்ரிக்காவுக்கான இத்திருப்பயணத்தைத் தொடங்கிய விமானப் பயணத்தில் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்த போது எய்ட்ஸ் பிரச்சனை, கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதற்கான விளம்பர ஸ்லோகங்களால் மட்டும் தீர்க்கப்பட முடியாது என்று கூறியிருந்தார். இதற்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் பிதாப்பிதா திருத்தந்தையின் இக்கருத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.