2009-03-20 19:38:15

ஸ்பெயின் நாட்டில் புதிய கருச்சிதைவு சட்டத்துக்கு எதிர்ப்பு ,200309 .


திருச்சபையும் அறிஞர்களும். ஸ்பெயின் நாட்டில் அமலுக்கு வர இருக்கும் புதிய கருச்சிதைவு சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள்

300 க்கும் அதிகமான விஞ்ஞானிகளும் , பேராசிரியர்களும் , அறிஞர்களும் ஸ்பெயின் நாடு கொண்டுவர உள்ள கருச்சிதைவு சட்டத்தை எதிர்த்துள்ளார்கள் . இதுவரை உள்ள சட்டப்படி கற்பழிப்பால் உருவான குழந்தைகளை 12 வாரக்கருவிலும் , குழந்தை கருவில் பாதிக்கப்பட்டிருந்தால் 22 வார காலத்திலும் , கருச்சிதைவு செய்ய அந்நாட்டில் அனுமதி உண்டு . வர இருக்கும் புதிய சட்டம் மருத்துவர் ஆலோசனையோடு தாயின் உடல் நலத்துக்குப் பாதிப்பு உண்டாகும் என அஞ்சப்பட்டாலோ , கரு வளர்ச்சியில் பாதிப்பு இருந்தாலோ 22 வாரத்தில் கருச்சிதைவு செய்ய அனுமதி வழங்க உள்ளது . ஆண்டுக்கு 1,20,000 குழந்தைகள் ஸ்பெயின் நாட்டில் கருச்சிதைவு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இது மன நலமில்லாத , வாழ்வில் தோல்வியைத் தழுவிய சமுதாயத்துக்கு அடையாளம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .








All the contents on this site are copyrighted ©.