2009-03-20 19:35:57

நியூ மெக்சிக்கோ மாநிலம் மரண தண்டனையை நீக்கியுள்ளது .200309 .


அமெரி்க்காவின் நியூ மெக்சிக்கோ மாநிலம் மரண தண்டனையை நீக்கியுள்ளது .

இம்மாதம் 18 ஆம் தேதி அம்மாநில ஆளுநர் பில் ரிச்சார்ட்சன் மரணதண்டனை வழங்குவதை நீக்கியுள்ளார் . அவர் பல காலமாக மரணத்தீர்ப்பு வழங்குவதற்கு ஆதரவு அளித்துவந்தவர் . அமலாக்கச் சட்ட ஆவணத்தில் ஒப்புதல் கையொப்பம் போடுவதற்கு முன்னர் தேவாலயம் சென்று கத்தோலிக்கராகிய அவர் திருப்பலி விருந்தில் பங்கு கொண்டு , பின்னர் சிறையையும் பார்வையிட்ட பிறகு மனமாற்றம் பெற்றதாகக் கூறியுள்ளார் . அதன் விளைவாக மரண தண்டனை வழங்கும் சட்டத்துக்கு ஒப்புதல் தர மறுத்து விட்டதாகத் தெரிகிறது . அமெரி்க்காவின் 15 மாநிலங்களில் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது . அமெரிக்க ஆயர்குழுவும் , கத்தோலிக்கத் தலைவர்களும் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது .








All the contents on this site are copyrighted ©.