2009-03-20 19:32:34

காங்கோ நாட்டின் மோதல்கள் பற்றி அந்நாட்டு ஆயர்கள். 200309 .


காங்கோ நாட்டில் நடக்கும் மோதல்கள் பற்றிக் கருத்துப் பரிமாறுகிறார்கள் அந்நாட்டு ஆயர்கள் . காங்கோவின் ஆயர்கள் அவர்களுடைய தவக்காலச் செய்தியில் அங்கு நடக்கும் வன்முறைகள் பற்றிக் கூறியுள்ளனர் . இவை பற்றி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் உரோமையில் நடக்க உள்ள ஆப்பிரிக்க ஆயர்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள் ஆயர்கள் .

அந்நாட்டில் நிலையில்லாத அரசு நடப்பது பற்றியும் , போர் ஆயுதங்களோடு நடக்கும் உள்நாட்டுக் குழப்பங்கள் பற்றியும் ,நாடுகளுக்கு இடையே இயற்கை வளங்களைப் பங்கிடுவது பற்றிய பிரச்சனை போன்றவையும் கடும் குழப்பத்தைக் கொடுப்பதாக ஆயர்கள் தெரிவித்துள்ளனர் . அங்குள்ள ஷாப்போ மாநிலத்தின் தலைநகர் கிஸான்கனியின் ஆயர்கள், கத்தோலிக்க மக்கள் தவக்காலத்தில் மனமாற்றத்துக்கு வழிசெய்யவும் , நோன்பிருந்தும் , தவமுயற்சிகளைச் செய்தும் , பாவமன்னிப்பு விழைந்தும் , ஏழைக்களுக்குத் தானமிட்டும் அந்நாட்டுக்கு அமைதி திரும்ப செபிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்







All the contents on this site are copyrighted ©.