2009-03-20 19:40:19

இந்திய அரசியலாருக்கு கிறிஸ்தவ மகளிர் குழுவினர் பரிந்துரை.200309 .


இந்தியாவில் தேர்தல் வர இருக்கும் இத்தருணத்தில் பாலின அடிப்படையில் மகளிரை 2 ஆம் தரமாகப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் , மாநில , மைய அரசு சட்ட சபைகளில் அவர்களுக்கு அதிகமான இடங்களை வழங்க வேண்டும் எனவும் கிறிஸ்தவ மகளிர் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர் . இம்மாதம் 17 ஆம் தேதி டெல்லியில் கூடிய மகளிர் குழுக்கள் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய தலித் மக்களுக்கும் , இஸ்லாமிய தலித் மக்களுக்கும் மற்ற இந்து சமயத் தலித் மக்கள் பெறும் தனிச் சலுகைகளையும் சிறப்பு உரிமைகளையும் வழங்கும் சட்டத்தை கொண்டுவரவேண்டும் எனவும் கோரியுள்ளனர் . எங்களுடைய கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் அவர்களுடைய கொள்கை விளக்க , திட்ட விளக்க அறிக்கையில் வெளியிடவேண்டும் என மகளிர் இந்தியக் கிறிஸ்தவ இளம் மகளிர் அணி உறுப்பினர் கல்பனா டேவிட் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.