2009-03-20 14:21:39

அங்கோலாவில் திருத்தந்தை : எல்லாவிதமான மோதல்களை மேற்கொள்வதற்கு பேச்சுவார்த்தையே சிறந்த வழி,


மார்ச்20,2009. அரசுத்தலைவர், அரசு அதிகாரிகள் மற்றும் விசுவாசிகள் அனைவருக்கும் தன் நல்வாழ்த்துக்களை எடுத்துரைத்து அங்கோலா நாட்டிற்கான தனது முதல் உரையைத் துவக்கிய பாப்பிறை, 1992ம் ஆண்டு மறைந்த திருத்தந்தை 2ம் ஜான் பவுல் இந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டதையும், நீதி, அமைதி, ஒப்புரவு, பிறரன்பு மற்றும் மன்னிப்புடன்கூடிய சமூகத்தைக் கட்டி எழுப்ப அழைப்பு விடுத்ததையும் நினைவுகூர்ந்தார்.

எல்லாவிதமான மோதல்களையும் மேற்கொள்ள பேச்சுவார்த்தையே சிறந்தவழி என்பதையும் எடுத்துரைத்தார் பாப்பிறை 16ம் பெனடிக்ட். மக்களிடையே அமைதியையும் புரிந்து கொள்ளும் தன்மையையும் கட்டி எழுப்ப உதவுங்கள். பகுத்தறிவு மற்றும் விசுவாசம் எனும் இறகுகளைப் பயன்படுத்தும்போது உங்கள் அயலார்களை சகோதர சகோதரிகளாக ஏற்றுக் கொள்ள முடியும். வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்ந்து வரும் ஏழை மக்களை மறந்துவிடாதீர்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிராசையாக்காதீர்கள் என்ற அழைப்புகளுடன் அங்கோலா நாட்டிற்கான தனது முதல் உரையை நிறைவு செய்தார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.